வீரமே ஜெயம்.. மீண்டும் வெளியாகும் மாவீரன்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’.இப்படம் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
வீரமே ஜெயம்.. மீண்டும் வெளியாகும் மாவீரன்
Published on: 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

மாவீரன் போஸ்டர்

இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com