விஜய் தேவரகொண்டா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர்.லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா
Published on

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

லைகர்

மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

லைகர்

இந்நிலையில், லைகர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலாக ரூ. 33.12 கோடியை வசூலித்துள்ளது. இதனை தர்மா புரொடக்‌ஷன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டும் ரூ.15 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com