'லைகர்' பட தோல்வி.. விஜய் தேவரகொண்டா எடுத்த அதிரடி முடிவு..

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர்.லைகர் படம் இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியானது.
விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா
Published on

இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 'லைகர்' திரைப்படம் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.33.12 கோடி ரூபாயை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

லைகர்

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் கடுமையாக சரிந்தது. தற்போது வரை லைகர் திரைப்படம் ரூ.55 கோடியை மட்டுமே படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தின் ஒரு பகுதியை சார்மி கவுர் மற்றும் பிற இணைய தயாரிப்பாளர்களுக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.6 கோடி வரை அவர் நஷ்ட ஈடாக தரலாம் என கூறப்படுகிறது.

லைகர்

அதேபோல, படத்தால் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்க இயக்குனர் பூரி ஜெகந்நாத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com