எல்.ஜி.எம் படத்தின் முதல் காட்சியை பார்த்த சாக்ஷி டோனி

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் உருவாகியுள்ள திரைப்படம் ‘எல்.ஜி.எம்’.இப்படம் இன்று ரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
சாக்‌ஷி சிங் டோனி
சாக்‌ஷி சிங் டோனி
Published on

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படம் இன்று (ஜூன் 28) திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியானது.

இந்நிலையில், தயாரிப்பாளரான சாக்ஷி சிங் டோனி 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் முதல் காட்சியை சென்னை, ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com