ஆக்‌ஷனில் கலக்கும் விஷால்.. கவனம் ஈர்க்கும் டிரைலர்..

விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஷால்
விஷால்
Published on

'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி

'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

லத்தி

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் விஷால் கலக்கும் இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com