மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நிதின்சத்யா

நடிகர் நிதின் சத்யா நடிக்கும் படம் கொடுவா.இப்படத்தை இயக்குனர் சுரேஷ் சாத்தையா இயக்குகிறார்.
நிதின் சத்யா
நிதின் சத்யா
Published on

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நிதின் சத்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை -28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் 'கொடுவா' படத்தில் நடித்து வருகிறார்.

சம்யுக்தா - நிதின் சத்யா

'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கொடுவா படக்குழு

துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ராமநாதபுரத்தை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் 'ஐங்கரன்' கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com