மீண்டும் இணையும் விக்ரம் படக்குழு? வெளியான புதிய தகவல்..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கமல்ஹாசன் - பகத் ஃபாசில்
கமல்ஹாசன் - பகத் ஃபாசில்
Published on

நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது.

'விக்ரம்' வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படம் 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்கு பிறகு நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் நடிகர் பகத் ஃபாசிலும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம்

மேலும், படம் குறித்த அப்டேட்கள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com