'ஜான்சி' வெப் தொடர் மூன்றாவது சீசன் வரும்.. நடிகர் கிருஷ்ணா உறுதி..

இயக்குனர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடித்த வெப்தொடர் ‘ஜான்சி’.இந்த வெப்தொடரின் இரண்டு சீசன்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கிருஷ்ணா
கிருஷ்ணா
Published on

'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஜான்சி வெப்தொடர் குழு

இவர் இயக்குனர் திரு இயக்கத்தில் 'ஜான்சி' என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். நடிகர் கிருஷ்ணா தயாரித்திருந்த இந்த வெப்தொடரின் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது.

ஜான்சி வெப்தொடர் குழு

முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்த நிலையில், இந்த வெப்தொடர் குறித்து நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசியதாவது, "முதல் சீசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் நல்ல ஹிட். இப்போது இரண்டாவது சீசன் நன்றாக போகுமென்று நம்புகிறேன். சீசன் 1 விட 2 எனக்கு நிறைய பிடித்திருக்கிறது. திரு அசத்தியிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி முழு காய்ச்சலோட வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இதை முதலில் 6 மாசத்தில் முடித்துவிடலாமென்று தான் ஆரம்பித்தோம். ஆனால் 2 வருடம் ஆகிவிட்டது. ஆனால் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன் சீசன் மூன்றும் வரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com