ஹிந்தியில் வெளியாகும் கோலமாவு கோகிலா..

தமிழில் வெளியான கோலாமாவு கோகிலா இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜான்விகபூர் நடித்துள்ளார்.
குட் லக் ஜெர்ரி
குட் லக் ஜெர்ரி
Published on

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த "கோலமாவு கோகிலா" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண குடும்பம் எப்படி போதை மருந்தை கடத்துகிறார்கள் என்ற சுவாரஸ்யமான கதையமைப்புடன் உருவாகியிருந்த இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

சித்தார்த் சென் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். "குட் லக் ஜெர்ரி" என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

குட் லக் ஜெர்ரி
குட் லக் ஜெர்ரி

குட் லக் ஜெர்ரி

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. "குட் லக் ஜெர்ரி" திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று படக்குழு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழில் "கோலமாவு கோகிலா" ஹிட்டானதைத் தொடர்ந்து ஹிந்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com