வெங்கட் பிரபு பட பூஜை.. சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிவகார்த்திகேயன்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் திரைப்படம் என்சி22.இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Published on

மாநாடு', 'மன்மத லீலை' போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

படக்குழு

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில்,  நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ராணா டகுபதி சர்ப்ரைஸ் விசிட் செய்து பூஜையில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் - ராணா டகுபதி

 மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் வெங்கட் பிரபுவின் பட பூஜைக்காக தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com