அமீரக கெளரவம் பெற்ற கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்..

ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.இந்த விசா 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியது.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். தற்போது கமல் ஹாசனுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே துபாய் வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com