இது என்னுடைய அதிர்ஷ்டம்.. ஆலியாபட் குறித்து ரன்வீர் சிங் கமெண்ட்..

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட்.இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ரன்வீர் சிங் - ஆலியாபட்
ரன்வீர் சிங் - ஆலியாபட்
Published on

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கங்கு பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். விரைவில் 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார்.

ஆலியாபட்

தற்போது ஆலியாபட் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ரன்வீர் சிங் கமெண்ட்

அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ரன்வீர் சிங், ''உன்னுடன் இந்த பயணத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்தது என்னுடைய அதிர்ஷ்டம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கமெண்ட்டுக்கு ரசிகர்கள் பலர் லைக் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com