

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பேட்டியளித்துள்ளார். அதில், மாமன்னன் திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை. நண்பர்கள் தகவல் சொன்னார்கள். 1972-ல் இருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். அம்மாவின் தீவிர விசுவாசி நான். என்னுடைய உழைப்பைப் பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர், அமைச்சர், சபாநாயகர் என பொறுப்புக் கொடுத்து அழகு பார்த்தார்கள். என்னுடைய சாயலில் இந்த படம் வந்திருந்தால் அது அம்மாவுக்குக் கிடைத்து வெற்றி என்று கூறினார்.