ராஜ்குமார் ஹிரானியின் அன்பு நிறை உலகம்.. டங்கி டிராப் 4 வெளியானது

நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ’டங்கி’.இப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராஜ்குமார் ஹிரானியின் அன்பு நிறை உலகம்.. டங்கி டிராப் 4 வெளியானது
Published on

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் டாப்சி பன்னு, போமன் இரானி, விக்கி கவுசல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, 'டங்கி' திரைப்படம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. ரயிலில் நடிகர் ஷாருக்கான் பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.

பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்கு சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன் (நடிகர் ஷாருக்கானின் கதாபாத்திரம்) தொடங்கிறது. அற்புதமான விசித்திரக் கதாபாத்திரங்களை இந்த டிராப்-4 அறிமுகப்படுத்துகிறது.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com