துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.இப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டிரைலர் நாளை (9ம் தேதி) வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com