வெப் தொடரில் பிரபல நடிகர்களுடன் நடிக்கும் திவ்ய பாரதி

சமீபத்தில் வெளியான பேச்சிலர் படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த திவ்ய பாரதி, தற்போது வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்.
திவ்ய பாரதி
திவ்ய பாரதி
Published on

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, சரத்குமார், விஜய்சேதுபதி, பிரசன்னா, பாபி சிம்ஹா, நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால், மீனா, பிரியாமணி, நித்யாமேனன் உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர்.

மணிரத்னம் உள்ளிட்ட பல இயக்குனர்கள் வெப் தொடர்கள் இயக்கி உள்ளனர். இந்நிலையில் டைரக்டர் சேரனும் வெப் தொடர் இயக்க தயாராகி உள்ளார். இவர் பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். சேரன் கடைசியாக இயக்கிய திருமணம் படம் 2019-ல் வெளியானது.

தற்போது சேரன் இயக்க உள்ள வெப் தொடரில் பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 5 பேரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து இந்த தொடரை எடுக்கிறார். இதில் நடிக்க பிரகாஷ்ராஜ், ஜெய பிரகாஷ் ஆகியோரிடமும் பேசி வருகிறார்கள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. திவ்ய பாரதி சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com