வைரலாகும் தனுஷின் ஹாலிவுட் பட டிரைலர்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்த்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தி கிரே மேன்
தி கிரே மேன்
Published on

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரே மேன்’. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர். 

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகிறது. ‘தி கிரே மேன்’ படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

தி கிரே மேன்

இந்நிலையில் 'தி கிரே மேன்' படத்தின் டிரைலரை தனுஷ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டிரைலரில் அதிகமான காட்சிகளில் தனுஷ் இடம்பெறவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியாகியுள்ள இந்த டிரைலர் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com