பிறந்தநாள் பரிசு: தனுஷின் 51வது படத்தின் அறிவிப்பு வெளியானது

தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.தனுஷின் 51வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
பிறந்தநாள் பரிசு: தனுஷின் 51வது படத்தின் அறிவிப்பு வெளியானது
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இதனை தனுஷ் இயக்கி நடிப்பதாகவும் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 51வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் போஸ்டரில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com