குற்றங்களின் உலகத்தை ஆராயுங்கள்.. தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் 'காஃபி'..

நடிகை இனியா நடித்துள்ள திரைப்படம் ‘காஃபி’.இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.
காஃபி
காஃபி
Published on

நடிகை இனியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காஃபி'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கி உள்ளார். மேலும், இதில் ராகுல் தேவ் மற்றும் முகதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

காஃபி

ஊழல் மற்றும் மனித கடத்தலுக்கு மத்தியில் காணாமல் போன தனது சகோதரனைக் கண்டுபிடிக்க துடிக்கும் ஒரு சகோதரியின் தேடலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வயாகம் 18 தமிழ் எண்டர்டெயின்மெண்ட் சேனலான கலர்ஸ் தமிழ் வருகிற நவம்பர் 27-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பவிருக்கிறது.

காபி போஸ்டர்

இது குறித்து நடிகை இனியா கூறியதாவது, "இது ஒரு அற்புதமான அனுபவம், குறிப்பாக ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளும் அனுபவம் எனக்கு கிடைத்தது. சத்யா போன்ற ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பது மிகவும் சவாலாகவும் இருந்தது. சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் உள்ளன, ஆனால் காபி பார்வையாளர்களுக்கு இன்னும் ஒரு படி அனுபவத்தை உயர்த்துவது உறுதி" என்று கூறினார்.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com