மனோபாலா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்

கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலா, இன்று உயிரிழந்தார்.இவரது மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோபாலா, இன்று உயிரிழந்தார். 69 வயதாகும் மனோபாலா இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com