பான் இந்திய படைப்பான 'பனாரஸ்' வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பனாரஸ்
பனாரஸ்
Published on

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

பனாரஸ்

இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

பனாரஸ் போஸ்டர்

காசியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி முதல் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com