அவனோட வாழ்க்க உங்களுக்கு விளையாட்டா போச்சா? கவனம் ஈர்க்கும் பனாரஸ் பட டிரைலர்..

இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பனாரஸ்
பனாரஸ்
Published on

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.

பனாரஸ்

இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

பனாரஸ்

இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

காசியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. 'பனாரஸ்' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com