அருள்நிதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைரி.இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
டைரி
டைரி
Published on: 

அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான 'தேஜாவு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'டைரி'. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார்.

டைரி

இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து 'டைரி' படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'டைரி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள 'டைரி' திரைப்படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com