கார்த்தி படத்தில் வில்லனாகும் அரவிந்த் சாமி?

கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அரவிந்த் சாமி - கார்த்தி
அரவிந்த் சாமி - கார்த்தி
Published on

பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்தி. இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-2 படத்தில் நடித்திருந்த வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கதில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜப்பான் 
ஜப்பான் 

ஜப்பான் 

இந்நிலையில் கார்த்தியின் 27வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி 27 படத்தை 96 படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரேம் குமார் இயக்கவுள்ளதாகவும் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி படத்தில் அரவிந்த் சாமி இணைந்தால் இதுவே இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com