அடுத்த மாதம் தொடங்கும் அஜித் -விக்னேஷ் சிவன் படத்தின் படப்பிடிப்பு?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ஏகே 62.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அஜித் - விக்னேஷ் சிவன்
அஜித் - விக்னேஷ் சிவன்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.

ஏகே 62

இந்நிலையில், ஏகே 62 படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு பெரும்பாலும் மும்பை மற்றும் சென்னை பகுதியில் நடக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com