தளபதி 67 படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் திரிஷா.. வைரலாகும் புகைப்படம்

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.இப்படத்தின் படப்பிடிப்பிற்காக திரிஷா காஷ்மீருக்கு செல்வதாக கூறப்படுகிறது.
திரிஷா
திரிஷா
Published on

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

திரிஷா
திரிஷா

திரிஷா

இப்படத்தில் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பேசப்பட்ட நிலையில் தளபதி 67 படப்பிடிப்புக்காக திரிஷா காஷ்மீர் செல்லவுள்ளதாகவும் இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் கிளம்பியதாகவும் தெரிவித்து பலரும் திரிஷாவின் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com