'டூலெட்' ஷீலா படத்தை துவங்கி வைத்த பா.ரஞ்சித்

இயக்குனர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஷீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியது.
பா. ரஞ்சித்
பா. ரஞ்சித்
Published on

அறிமுக இயக்குனர் ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் 'மெட்ராஸ்' திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிருஷ்ணன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.

துவக்க விழா

கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட் ரமணன் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சிவசங்கர் வசனம் எழுதுகிறார்.

இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று (ஜூலை-6) நடைபெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இந்த துவக்க விழாவில் கலந்துகொண்டு இப்பட பணிகளை துவங்கி வைத்தார்.

படக்குழு

நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com