விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அதிதி ஷங்கர்.. குவியும் பாராட்டுக்கள்

முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் அதிதி.
அதிதி
அதிதி
Published on

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அதிதி அறிமுகமாகியுள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். 'முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதிதி
அதிதி

அதிதி

அதிதி, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஆத்மிகா மறைமுகமாக இதுகுறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அதிதி
அதிதி

அதிதி

இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்". என்று அவர் கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்துக்கு பலரின் ஆதரவு கிடைத்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com