நலமுடன் வீடு திரும்பினார் வெங்கல் ராவ்

வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் வெங்கல் ராவ் நடித்துள்ளார்.வெங்கல் ராவ், கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெங்கல் ராவ்
வெங்கல் ராவ்
Published on

நடிகர் வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்டவர் வெங்கல்ராவ், சண்டை கலைஞராக இருந்து காமெடி நடிகராக மாறியவர். 'பணக்காரன்', 'ராஜாதி ராஜா', அமிதாப், தர்மேந்திரா உள்பட பல நடிகருக்கும் பல படங்களுக்கும் வெங்கல் ராவ் டூப் போட்டுள்ளார். சினிமாவில் சண்டை கலைஞராக தன் பயணத்தை தொடங்கிய வெங்கல் ராவ் சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் பின்னர் நடிகராக மாறினார்.

வெங்கல் ராவ்
வெங்கல் ராவ்

வெங்கல் ராவ்

வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் அவரது டீமில் உள்ள பல நடிகர்களும் சினிமா வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர்.

வெங்கல் ராவ்
வெங்கல் ராவ்

வெங்கல் ராவ்

அதில் வெங்கல் ராவும் ஒருவர். வடிவேலு மீண்டும் களம் இறங்கிய பிறகு பழைய ஆட்களையும் தனது கூட்டணியில் சேர்த்து வருகிறார். தற்போது சுராஜ் இயக்கி வரும் 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' படத்திலும் வெங்கலுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

வெங்கல் ராவ்
வெங்கல் ராவ்

வெங்கல் ராவ்

சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், வெங்கல் ராவ் நலமுடன் வீடு திரும்பினார். வெங்கல்ராவ் உள்ளிட்ட வடிவேலுவின் கூட்டணியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com