மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள்.. அஜித்துடன் சமீபத்திய உரையாடல் குறித்து சூரி

நகைச்சுவை நடிகர் சூரி, சமீபத்தில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் விடுதலை.இப்படம் நல்ல வரவேற்பை பெற்று, சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.
சூரி - அஜித்
சூரி - அஜித்
Published on

வேலாயுதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, அஞ்சான், அண்ணாத்தே உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. இவர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயாகனாக நடித்த விடுதலை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சூரியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தது.

சூரி
சூரி

சூரி

இந்நிலையில் நடிகர் சூரி, சமீபத்தில் அஜித்தை சந்தித்து பேசியதாகவும் அப்பொழுது சூரியிடம் அஜித் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாகவும் இணையத்தில் பேசப்படுகிறது. அஜித் கூறியதாவது, "மற்றவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். உங்களை பற்றி வரும் விமர்சனங்களை தலையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மதிக்க தொடங்குங்கள் பிறகு மற்றவர்கள் தானாக உங்களை மதிப்பார்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள் சூரி" என்று அஜித் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com