விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த ஷாம்

2001ம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் ஷாம்.தற்போது விக்ரம் பட இயக்குனருடன் ஷாம் இணைந்துள்ளார்.
ஷாம்
ஷாம்
Published on

2001ம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் ஷாம். அதன்பின் லேசா லேசா, இயற்கை, ஏபிசிடி, 6 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலடைந்தார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இப்படத்தில் விஜய்க்கு சகோதரராக நடித்திருந்தார்.

ஷாம்
ஷாம்

ஷாம்

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படத்தில் ஷாம் நடித்து வருகிறார். இதில் ஷாமுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com