விருமன் பட வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடிய கார்த்தி

முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
விருமன்
விருமன்
Published on: 

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார்.

விருமன்
விருமன்

விருமன்

மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கார்த்தி
கார்த்தி

கார்த்தி

இந்நிலையில் விருமன் திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் கார்த்தி, சூரி, நடிகை அதீதி சங்கர், இயக்குனர் முத்தையா உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தனர். மதுரை திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி பேசியதாவது, மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி என்றும், விருமன் படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கும், திரையரங்கு நிர்வாகிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com