கௌரவம் அளித்த அமீரகம்.. நன்றி கூறிய கமல்

ஐக்கிய அமீரகம் இந்திய திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது.இந்த விசா 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியது.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார் ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல் ஹாசனுக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கியது குறித்து கமல் நன்றி கூறி ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com