search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா
    X

    துல்கர் சல்மான்

    ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா'

    • இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'.
    • இப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரைக்கு வரவுள்ளது.

    இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    கிங் ஆஃப் கோதா போஸ்டர்

    ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 -ஆம் ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    Next Story
    ×