பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே.சுரேஷின் 'ஒயிட் ரோஸ்'

'விசித்திரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஒயிட் ரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்
Published on

அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

ஒயிட் ரோஸ் படக்குழு

சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த 'ஒயிட் ரோஸ்' திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com