பூஜா ஹெக்டே- ராஷ்மிகா இடையே கடும் போட்டி

பிரபல நடிகைகளான பூஜா ஹெக்டே- ராஷ்மிகா இடையே ஜுனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே - ராஷ்மிகா
பூஜா ஹெக்டே - ராஷ்மிகா
Published on

ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டதால் படத்தில் நடித்த என்.டி.ஆரின் அடுத்த படம் எதுவாக இருக்கும் என்ற எதிபார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபலமான ஹீரோக்களுக்கு ஹிட் கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா படத்தில் நடிக்க இருக்கிறார் என்.டி.ஆர். கொரட்டாலா சிவா தற்போது வெளியாகியிருக்கும் ஆச்சார்யா படத்தை இயக்கி வெளியாகியி இருக்கிறது. 

பூஜா ஹெக்டே - ராஷ்மிகா 

இதனால் அடுத்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கிறார். சிவா கூறும்போது, “என் அடுத்த படத்தில் என்.டி.ஆர். நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக முதலில் ஆலியா பட் நடிப்பதாக இருந்தது. ஒப்பந்தம் செய்த பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் விலகிக் கொண்டார். இப்போது ராஷ்மிகாவும், பூஜா ஹெக்டேவும் நடிக்க போட்டி போடுகிறார்கள். காரணம் இது பான் இந்தியா படமாக வர இருக்கிறது. அதிக பட்சமாக ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது” என்று கூறியிருக்கிறார் கொரட்டாலா சிவா.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com