ஏகே63 படத்தை இயக்கப்போவது யார்..? இணையத்தை தெறிக்கவிடும் தகவல்..

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ‘ஏகே63’ படத்தில் நடிக்கவுள்ளார்.
அஜித்
அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அஜித் - விக்னேஷ் சிவன்

ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இன்னும் ஏகே 62 படப்பிடிப்பே தொடங்கப்படாத நிலையில், ஏகே 63 படம் குறித்த தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அஜித் - அட்லீ

அதன்படி, ஏகே 63 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் சிறுத்தை சிவா, விஷ்ணு வர்தன் மற்றும் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது. இவ்வாறு மாறிமாறி இயக்குனர் பெயர்கள் வலம் வந்தாலும் ஏகே 63 படத்தை இயக்க அட்லீக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com