தமன்னா - விஜய் வர்மா டேட்டிங் புகைப்படம் வைரல்

அயன், ஜெயிலர், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா.தமன்னா-விஜய் வர்மா திருமணம் விரைவில் நடை பெற இருக்கிறது.
தமன்னா - விஜய் வர்மா  டேட்டிங் புகைப்படம் வைரல்
Published on

அயன், ஜெயிலர், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி மொழி படங்கள் நடித்து வருகிறார். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலயா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் மிகப்பெரியளவில் வைரலாகியது.

சமூக வலைதளங்களிலும் ஏராளமான பிரபலங்கள் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து தமன்னா நடித்த அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிப்பெற்றது.

தற்போது இந்தி திரை உலகில் பல படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வரும் தமன்னா லஸ்ஸ்டோரிஸ் 2 என்ற படத்தில் நடித்த போது அவருடன் இணைந்து நடித்த விஜய் வர்மாவுடன் காதல் வயப்பட்டார்.

காதலர்களாக பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வரும் தமன்னா-விஜய் வர்மா திருமணம் விரைவில் நடை பெற இருக்கிறது.

அடிக்கடி விழாக்களுக்கும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று ஒன்றாக கலந்து கொள்ளும் விஜய் வர்மா,தமன்னா மும்பையில் நடந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com