

சூர்யாவின் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ஜித்துவின் ‘சீன்’. தீபாவளிக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.210 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
சூர்யாவின் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்தில் கருப்பு திரைப்படம் உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அதன்பின் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரூ.209 கோடி வசூலித்து, சூர்யாவின் அதிகம் வசூலித்த இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்தது.
இந்நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பின்னுக்கு தள்ளி, 2வது இடத்தை தக்க வைத்துள்ளது ‘சீன்’ திரைப்படம்.
ஜித்து மாதவன் எழுத்து மற்றும் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென் நடிப்பில் நவ.6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘சீன்’.
இப்படம் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. மேலும் நஸ்லென் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. படத்திற்கு சுசின் ஸ்யாம் இசையமைத்துள்ளார்.
ஆனந்த்ராஜ், லால், ராஜ்பிரியன், சுரேஷ் மதியழகன் மற்றும் கஜராஜ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.