சூர்யாவின் "ரெட்ரோ": இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யாவின் "ரெட்ரோ": இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான தி ஒன் பாடலையும் படக்குழு வெளியிட்டது.

மேலும், ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 'ரெட்ரோ' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகின்ற 18ம் தேதி நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com