சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் டைட்டில் டீசர் 2 கோடி பார்வைகளை கடந்தது

சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் டைட்டில் டீசர் 2 கோடி பார்வைகளை கடந்தது
Published on

சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சிரேயா சரண் சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டைடில் டீசர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை டைட்டில் டீசர் வீடியோ யூடியூபில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com