சூர்யா 46 - மமிதா பைஜுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்

சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார்சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
சூர்யா 46 - மமிதா பைஜுவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்
Published on

ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 46 என அழைக்கப்படுகிறது.

இயக்குனர் வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யா 46 திரைப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மமிதா பைஜூவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் கமெர்சியல் திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com