ராமாயணத்தில் சூஃபி இசை.. ஏ.ஆர். ரகுமான் பாடலுக்கு வலுக்கும் கண்டனம்

படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
ஏ.ஆர். ரகுமான்
Published on: 
Summary

ராமாயணா பட பாடலில் சூஃபி இசை இடம்பெற்றுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’.

அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 6-ந்தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

இசை

ஏஆர் ரகுமான், உலக இசை ஜாம்பவான் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

அமேசான் மியூசிக் சார்பில் கடந்த அக்டோபர் 22 அன்று ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ராமாயணா படத்தின் 'மங்கள் ரங்' பாடல் வெளியானது.

இராமாயணத்தில் சூஃபி இசை

ஏஆர் ரகுமான் இசையமைத்த இப்படத்தின் பாடலை அர்ஜித் சிங் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ராமர் மற்றும் சீதனையின் தெய்வீக பிணைப்பையும் அவர்களின் ஒருமித்த பயணத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலின் ஒரு பகுதியில் ரகுமான், சூஃபி (Sufi) இசையில் உள்ள க்குவாலி (qawwali) என்ற இசையை பயன்படுத்தி உள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

விமர்சனம்

இந்து இதிகாச கதையில் சூஃபி இசையை இடம்பெற செய்தது முறையல்ல என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வணிக நோக்கத்திற்காக வரலாற்றின் தவறான சித்தரிப்பு சரியல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏ.ஆர் ரகுமானிடம் சமூக வலைத்தளத்தில் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

சூஃபி இசை என்பது இஸ்லாமிய மரபில் வரும் சூஃபி மெய்யியல் தத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒரு இசை வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com