ஸ்டார் படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாகிறது

படத்தின் அடுத்த பாடலான மெலடி பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது.அப்பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து குத்தாட்டம் ஆடி இருந்தார்,
ஸ்டார் படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியாகிறது
Published on

மணிகண்டன் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த டாடா படத்தில் கவின் நடித்து இருந்தார். அபர்னா தாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்களும் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடயே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது,

கவின் அடுத்ததாக ஸ்டார் மற்றும் கிஸ் படங்களில் நடித்து வருகிறார்.இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஸ்டார் படம் உருவாகியுள்ளது.

இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம் வெளியானது. அடுத்ததாக இப்படத்தின் இரண்டாம் பாடலான "விண்டேஜ் லவ்" பாடல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகிய நிலையில் படத்தின் அடுத்த பாடலான மெலடி பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

அப்பாடலில் கவின் பெண் வேடம் அணிந்து குத்தாட்டம் ஆடி இருந்தார், மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கவின் எப்படி பெண் வேடத்திற்கு மேக்அப் போட்டு மெலடி பெண்ணாக மாறினார்  என்ற வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

. சாண்டி மாஸ்டர் இந்த பாடலிற்கு நடன் இயக்குனர் ஆவார். இதற்கு அடுத்து நாளை படத்தின் அடுத்த பாடலான ஜிமிக்கி காசல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com