

இவர் நடிப்புக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ‘பத்தா’ புகழ் குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜ், அடுத்ததாக தனுஷின் 56வது படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்த தகவலை உறுதிப்படுத்திய சாய் பிரித்விராஜ், பத்தா படத்தின் நடிப்பைப் பார்த்தே இந்த வாய்ப்பை தயாரிப்பாளர்கள் தனக்கு வழங்கியதாக கூறியுள்ளார்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ், ப்ரீத்தி முகுந்தன், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு மற்றும் விஜய் குமார் ஆகியோர் நடிக்கும் ‘D56’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரையில் தொடங்கியது. தனுஷின் ஓம் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர், இப்படத்திற்கும் இசையமைக்கிறார் .
நாக வம்சி மற்றும் ஹரிதா லிங்குசாமி ஆகியோர் சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ப்ரைமார்க் புரொடக்ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரிக்கின்றனர்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பிரித்விராஜ், லிஜோமோல் ஜோல், சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளப் படம் பத்தா. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிவருகிறது.
அக்.1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகளவில் இதுவரை ரூ.18.19 கோடி வசூலித்துள்ளது.