ராம் சரணின் `பெத்தி' படத்தில் இணைந்த ஸ்ரீலீலா?

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.
ராம் சரணின் `பெத்தி' படத்தில் இணைந்த ஸ்ரீலீலா?
Published on

தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.

ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com