எஸ்ஆர் பிரபாகரன் தயாரித்து, இயக்கிய றெக்கை முளைத்தேன் - சென்சார் அப்டேட் வெளியீடு

இந்த படத்தின் பின்னணி இசையை தரண்குமார் அமைக்கிறார்.இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது.
எஸ்ஆர் பிரபாகரன் தயாரித்து, இயக்கிய றெக்கை முளைத்தேன் - சென்சார் அப்டேட் வெளியீடு
Published on

எஸ்ஆர் பிரபாகரன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் புதிய படம் றெக்கை முளைத்தேன். எஸ்ஆர் பிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள றெக்கை முளைத்தேன் படத்திற்கு யுஏ சான்று வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த படத்தை தயாரித்ததோடு, எஸ்ஆர் பிரபாகரனே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்க்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்ற பிரிவு அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

இவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஐந்து புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இந்த படத்தின் பின்னணி இசையை தரண்குமார் அமைக்க பாடல்களுக்கு தீசன் இசையமைக்ககிறார்.

கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவில், பிஜு டான் போஸ்கோ படதொகுப்பு செய்ய, கார்த்திக்துரை நிர்வாக தயாரிப்பு பணிகளை செய்துள்ளனர். இந்த படத்தை A.முனிஸ்வர், K.தீரா இணைந்து தயாரித்துள்ளனர். "றெக்கை முளைத்தேன்" திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com