கீர்த்தி சுரேஷ் எனக்கு ஜோடி என்றதும் நம்பவில்லை - சவுந்தரராஜா

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் ‘டோரதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சவுந்தரராஜா
Published on: 
Summary

‘டோரதி’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு கணவராக நடித்த சவுந்தரராஜா, வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் வழிகாட்டுதலுடன், மதுரை தமிழில் இயல்பான வசன உச்சரிப்பை கச்சிதமாக செய்துள்ளார். இந்த படம் அவருக்கு புதிய பட வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சுந்தரபாண்டியன்’, ‘ஜிகர்தண்டா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பிகில்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் 45 படங்கள் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சவுந்தரராஜா. தற்போது வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் ஒரு கொடூரமான வில்லன் அவதாரமெடுத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலம்

படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கணவராக நடித்திருக்கும் சவுந்தரராஜா, படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள டோரதி திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ஒரு முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை சவுந்தரராஜா கச்சிதமாக செய்து முடித்துள்ளார். குறிப்பாக, இவரது மதுரை தமிழும், வசன உச்சரிப்பும், மிக இயல்பாகவும் அமைந்தது படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

பட வாய்ப்புகள்

ஆணாதிக்கம் நிறைந்த, கொடூரமான கொலைகளை செய்ய தயங்காத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் சவுந்தரராஜா வெளிப்படுத்தியிருக்கும் இந்த மிரட்டலான நடிப்பு, அவருக்கு அடுத்தடுத்து பல பெரிய பட வாய்ப்புகளை பெற்றுத் தரும்.

முன்னதாக டோரதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சவுந்தரராஜா ஒரு ஆழமான, நேர்மையான நடிகர் என்றும், இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார்.

மதுரையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில் ‘டோரதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இது குறித்து நடிகர் சவுந்தரராஜா கூறியதாவது:-

படத்தில் எனக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொன்னதை நான் நம்பவே இல்லை. சும்மா காமெடி பண்ணாதீங்க என நான் சொல்ல அவர் உண்மையிலேயே அவர் தான் ஜோடி என கூறினார். தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் இயல்பாக எல்லோரிடமும் பழகினார். ‘டோரதி’ படம் எனக்கு புது உத்வேகத்தை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com