விலங்கு வெப் சீரிஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூரி.. 'மாமன்' பட பூஜை கிளிக்ஸ்

சூரியின் திரைப்பயணத்தில் விடுதலை திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது.சூரி நடித்த கருடன் திரைப்படமும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
விலங்கு வெப் சீரிஸ் இயக்குனருடன் கைகோர்த்த சூரி.. 'மாமன்' பட பூஜை கிளிக்ஸ்
Published on

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்திருந்தனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து சூரி நடித்த கருடன் திரைப்படமும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வந்தார். இத்திரைப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூரி அடுத்ததாக விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு மாமன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜை தொடர்பான புகைப்படங்களை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com