

கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாய்’ படத்தின் ‘குடிகார நெஞ்சு’ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் நடிகர் கவின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள படம் ‘ஹாய்’. இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் ‘குடிகார நெஞ்சு’ என்ற இப்படத்தின் நான்காவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ஹாய்’ படத்தின் ‘கண்ணக்குழியா’, ‘ரசகுல்லா’, ‘பச்ச புள்ள’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, விஷ்ணு எடவன் எழுதிய வரிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து, தற்போது வெளியாகி உள்ள ‘குடிகார நெஞ்சு’ பாடலை இயக்குனர் விஷ்ணு எடவன் எழுதி நடிகர் துருவ் விக்ரம் பாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இப்படம் கவின் மற்றும் நயன்தாரா இணையும் முதல் படமாகும். இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா தவிர, மறைந்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், மூத்த நடிகர்கள் பிரபு மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விடிவி கணேஷ், சத்யன், அம்ருதா சீனிவாசன், ஆதித்யா கதிர், குரேஷி, ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், காவியா அறிவுமணி மற்றும் மிர்ச்சி கெமி ஆகியோரும் நடித்துள்ளனர்.